சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி, காட்பாதர் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிரஞ்சீவி நடித்த காட்சிகளாக படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் நடந்து வருகிறது.
நேற்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் கட்சி மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். முழு மர்சியல் கதையில் உருவாகும் இந்த படம் 2026 சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. தற்போது சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள விஸ்வாம்பரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.