மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
106 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
106 days ago
விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்பாளர் விஜய் தயாரித்து, நடிக்கும் படம் பிக்பாக்ட். நாயகியாக யோகலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார், ஷாஜஹான் இசை அமைக்கிறார். ஜே.எஸ்.ஜூபர் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது. இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை. பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிக்பாக்கெட் பற்றி சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் சொல்லவில்லை. இந்த படம் அதுபற்றி விரிவாக பேசுகிறது. பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாபியா கும்பல் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது. புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி படப்பிடிப்பினை துவங்கி வைத்தார்.
106 days ago
106 days ago