முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா
ADDED : 192 days ago
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா 2010ல் ‛பாணா காத்தாடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றி, தோல்வியை கடந்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‛டிஎன்ஏ' படம் இந்தவாரம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அதர்வா 'வலை' எனும் புதிய ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இதில் முதல் முறையாக இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.