கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்திருந்த 'ரங்கூன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர், சனா மக்புல். அதன் பிறகு 'காதல் கண்டிஷன் அப்ளை' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெளிவரவில்லை. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சனா கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது: வெகுநாட்களாக கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறேன். எனக்கு கல்லீரல் சிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த நோய் குணமடைய நான் காத்திருக்கிறேன். தற்போது என் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றாலும் கூட, மனதளவில் நான் வலுவாக இருப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறேன் என்றார்.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.