மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
103 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
103 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
103 days ago
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கு தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட் நடிகர்கள் கூட ஆர்வமாக காத்திருப்பார்கள். அது சின்ன கதாபாத்திரம் என்றாலும் கூட அவரது படத்தில் நடிப்பதன் மூலம் இன்னும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகலாம் என்பதுதான் அதற்கு காரணம், அந்த வகையில் மலையாள திரை உலகில் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகராக நடித்து வரும் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா அப்படி மணிரத்னம் படத்தில் தனக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அது கைநழுவி போனது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'குட்டி ஸ்ராங்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் நடிப்பும் பிடித்துப் போனதால் இயக்குனர் மணிரத்னம் அந்த சமயத்தில் தான் இயக்க இருந்த 'கடல்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை வரச் சொன்னார். மணிரத்னம் பட வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக அவரை வந்து சந்தித்தேன். அப்போது என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர் நீங்கள் தானா என்று கேட்டார். அதற்கு நானும் நீங்கள் எதிர்பார்த்தது யாரை என்று கேட்டேன். குட்டி ஸ்ராங் படத்தில் நடித்தாரே அவரை தான் என்று கூற, அது நானே தான் சார் என்று கூறினேன். அதன் பிறகு தான் அவர் நம்பினார்.
அந்த படத்தில் எனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை தருவதாக அவர் கூறினார். நேரம் வரும்போது அழைப்பதாகவும் சொன்னார். ஆனால் அதன் பிறகு மூன்று மாதங்களாக படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. பின்னர் தான் மணிரத்னம் கதையை வேறு விதமாக மாற்றி விட்டார் என்றும் அதில் தனது கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்பதால் தன்னை அழைக்கவில்லை என்றும் எனக்கு தெரிய வந்தது. அந்த வகையில் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லையே என்கிற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கிறது” என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.
இவர் ரோஜா நடித்த 100வது படமான 'பொட்டு அம்மன்' என்கிற ஒரே ஒரு தமிழில் படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
103 days ago
103 days ago
103 days ago