உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ்

தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கர்நாடகாவைத் தவிர மற்ற இடங்களில் வெளியான படம் 'தக் லைப்'. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசிய பேச்சு கர்நாடகாவில் சர்ச்சையை எழுப்பியது. கன்னட அமைப்புகளும், கன்னட திரைப்பட வர்த்தக சபையும் படத்திற்கு எதிராக ஒன்று திரண்டனர். வர்த்தகசபை படத்தை வெளியிட மாட்டோம் என தடையை அறிவித்தது.

உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து கர்நாடகாவில் படத்தை வெளியிட உத்தரவு பெற்றுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு இந்த உத்தரவு பெற்றதால் நாளை ஜுன் 20ம் தேதி இந்தப் படத்தை கர்நாடகாவில் வெளியிட வாய்ப்பில்லை. அதனால், ஜுன் 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படம் தோல்வியடைந்தாலும் கர்நாடகாவில் படத்தை வெளியிட வேண்டும் என கமல்ஹாசன் தரப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. எத்தனை நாட்கள் ஓடுகிறது, எவ்வளவு வசூல் என்பது பிரச்சனையில்லை. படம் வெளியாகி, அங்கு திரையிடப்பட வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்கும் என நினைக்கிறார்களாம்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை, கர்நாடகாவில் உள்ள தியேட்டர்காரர்கள் இதற்கு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதுதான் இப்போது எழும் கேள்வி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !