மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
105 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
105 days ago
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தின்போது, வாராவாரம் வெளியாகும் திரைப்படங்களுக்கு யு டியூப் சேனல் மூலமாக விமர்சனம் செய்வதற்கு தயாரிப்பாளர் தரப்பிடம் பணம் கேட்கப்படுகிறது என்றும் சில தயாரிப்பாளர்கள் தாங்களாகவே பணம் கொடுத்து தங்களது படங்களுக்கு நல்லபடியாக விமர்சனம் செய்யச் சொல்கிறார்கள் என்றும் விவாதம் நடைபெற்றது. அது மட்டுமல்ல அப்படி பணம் தருவதற்கு மறுக்கப்படும் திரைப்படங்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்யப்படுவதும் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. கடந்த ஒரு வார காலமாகவே இது போன்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கேரளாவிலும் இப்படி விமர்சனத்திற்கு பணம் ஏற்பதாக பிரபல இயக்குனர் விபின் தாஸ் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'குருவாயூர் அம்பல நடையில்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இவர். தற்போது ஆந்திர தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இவர் தயாரித்துள்ள 'வியாசன சமேதம் பந்து மித்ராதிகள்' என்கிற படம் கடந்த வாரம் வெளியானது.
இந்த படத்தை நல்ல விதமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் தான் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று பிரபல யு டியூபர் ஒருவர் பணம் கேட்டதாகவும் ஆனால் அப்படி பணம் கொடுத்து முறையற்ற வழியில் தன் படத்தை விளம்பரம் செய்ய தனக்கு விருப்பமில்லை என்பதால் தான் பணம் கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ள விபின் தாஸ், அப்படி பணம் தர மறுத்ததாலேயே சம்பந்தப்பட்ட அந்த யு டியூபர் தன் படத்தை பற்றி தனது சேனலில் எதிர்மறை விமர்சனம் செய்துள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, அந்த விமர்சனத்தின் கீழ் பாசிடிவான கருத்துக்களை யார் பதிவிட்டாலும் அதை நீக்கி விட்டு மோசமான கருத்துக்களை மட்டும் அப்படியே கமென்ட் பகுதியில் விட்டு வைத்துள்ளாராம். இதனால் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதுடன் இயக்குனர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் இயக்குனர் விபின் தாஸ்.
105 days ago
105 days ago