மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
106 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
106 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
106 days ago
மலேசிய இந்திய இசைத் துறையில் புரட்சி பாடகராக புகழ்பெற்றவர் 'டார்க்கி' நாகராஜா. இவரது வாழ்க்கை 'அக்கு டார்க்கி' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. பாக்கெட் பிளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, விக்ரம் லட்சுமணம் இயக்குகிறார். யுகன் சண்முகம் ஒளிப்பதிவு செய்கிறார், இலையராஜா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விக்ரம் லட்சுமணம் கூறியதாவது: சாம்பாராக் எனும் தனித்துவமான இசைமுறையை உருவாக்கிய டார்க்கியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த சினிமா அவரின் வாழ்க்கைப் பயணத்தையே திரைபடமாகக் கொண்டு வருகிறது. 'அக்கு' என்பது மலாய் மொழியில் “நான்” என்று பொருள்படும் . அக்கு டார்க்கி என்பது ஒரு வலிமையான அடையாளமும், பெருமைமிக்க மரபும் கொண்ட தலைப்பாகும். டார்க்கியின் துணிச்சலான குரல் மற்றும் அழியாத பார்வையை இந்த பெயர் பிரதிபலிக்கிறது.
கோலா லிப்பிஸிலிருந்து கோலாலம்பூருக்குள் வெறும் கனவுகளோடு வந்த டார்க்கி, பின்னாளில் 'தி கீய்ஸ்' என்ற புகழ்பெற்ற இசைக்குழுவின் தலைவராக எழுந்து, பல தலைமுறைகளை தனது இசையால் கவர்ந்தவர். அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், சினிமா மற்றும் இசைக்கு அளித்த தாக்கம் மற்றும் பிரபலம் பின்னே இருக்கின்ற தியாகங்களை இந்த திரைப்படம் ஆழமாக எடுத்துரைக்கிறது. என்றார்.
106 days ago
106 days ago
106 days ago