உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை

'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை

பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி ராஜா சாப்'. தெலுங்கில் சில கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் மாருதி இப்படத்தை இயக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியானது.

எதிர்பார்த்ததை விடவும் குறைவான பார்வைகளையே யு டியுப் தளத்தில் பெற்றது. இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் சேர்த்துப் பார்க்கும் போது டீசருக்கான வரவேற்பு அதிகம் இருந்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது.

பிரபாஸ் நடித்த 'பாகுபலி 2' படம் 1800 கோடி வரை வசூலித்தது. அதற்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார்' ஆகிய படங்கள் அவ்வளவு பெரிய வசூல் சாதனையைப் படைக்கவில்லை. கடந்த வருடம் வெளியான 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது.

'தி ராஜா சாப்' படத்தின் வசூல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இயக்குனர் மாருதி, எந்த சந்தேகமும் இல்லாமல் 'தி ராஜா சாப்' படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை பாக்ஸ் ஆபீஸில் குவிக்கும். பான் இந்தியா வெளியீடு, சஞ்சய் தத் படத்தில் இருப்பது, மூன்று ஹீரோயின்கள் மட்டுமல்லாது கலகலப்பான பிரபாஸ் என படம் குறித்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது என பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !