மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
104 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
104 days ago
மலையாளத்தில் 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சிமா மோகன், தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படம் மூலமாக தமிழில் நுழைந்து சில படங்களில் நடித்த பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஆமதாபாத் விமான விபத்து குறித்தும் அது சம்பந்தமாக தற்போது நடக்கும் சில அநாகரிக நிகழ்வுகள் குறித்தும் தனது வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மனிதநேயம் எங்கே போனது? இதயத்தையே உலுக்குகின்ற ஒரு விபத்தில் பல பேர் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆனால் இங்கே சில பேர் அதை வைத்து லாபம் சம்பாதிக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது. அந்த சம்பவத்தை சென்சேஷன் ஆக்கி ஜோதிடம், நியூமராலஜி மூலமாக பயப்படுத்தும் விதமான தகவல்களை பரப்புவதுடன் மட்டமான ஜோக்குகளை உருவாக்குவது மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் இடிப்பது போல மைக்கை நீட்டி அவர்களைப் பேசச் சொல்லி வற்புறுத்துவது என பல அநாகரிக நிகழ்வுகள் நடக்கின்றன. இரக்கமும் மரியாதையும் தேவைப்படும் இந்த நேரத்தில் அடுத்த தலைமுறைக்கு நாம் இதைத்தான் உதாரணமாக நிர்ணயிக்க போகிறோமா ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
104 days ago
104 days ago