உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்!

பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்!


பிரபுசாலமன் இயக்கிய 'மைனா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான விதார்த், அதன்பிறகு 'முதல் இடம், கொலைகாரன், ஜன்னல் ஓரம், வீரம், குரங்கு பொம்மை' என பல படங்களில் நடித்தார். அதோடு ஹிப்ஹாப் ஆதி நடித்த 'அன்பறிவு' என்ற படத்தில் வில்லனாகவும் நடித்தார். மேலும், கடந்த 2015ம் ஆண்டு காயத்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட விதார்த்துக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது பி.எம்.டபிள்யு எக்ஸ் -1 என்ற ஒரு காரை வாங்கி இருக்கிறார் விதார்த். அந்த காருடன் மனைவி, மகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !