மேலும் செய்திகள்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
102 days ago
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
102 days ago
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
102 days ago
எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்'. நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் அறிமுக வீடியோ, 'த பர்ஸ்ட் ரோர்' என்ற பெயரில் வெளியானது. டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிடுவதற்கு முன்பாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்படி ஒரு 'க்ளிம்ப்ஸ்' வீடியோ வெளியிடுவது தற்போதைய டிரென்ட்.
நேற்று வெளியான இந்த வீடியோ யு டியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 22.5 மில்லியன் பார்வைகளைப் பெற்று தமிழ் சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. பார்வைகளில் முன்னணி பெற்று சாதனை புரிந்தாலும் விருப்பங்களில் (லைக்ஸ்) அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் இப்படியான முன்னோட்ட வீடியோ பெற்ற 7,85,000 லைக்குகளை விடவும் சற்றே பின் தங்கி 7,70,000 லைக்குகளைப் பெற்றுள்ளது.
இந்தியப் படங்களின் சாதனையில் 36 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'டாக்சிக்', 31 மில்லியன் பெற்ற 'பெத்தி', 27 மில்லியன் பெற்ற 'புஷ்பா', 26 மில்லியன் பெற்ற 'தேவரா' ஆகிய படங்களின் 'க்ளிம்ப்ஸ்' வீடியோக்களுக்கு அடுத்து 5வது இடத்தைப் பெற்றுள்ளது 'ஜனநாயகன்' க்ளிம்ப்ஸ்.
அனைத்து தளங்களிலும் மொத்தமாக 24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வைகளைப் பெற்று தமிழ் சினிமா க்ளிம்ப்ஸ் வீடியோக்களில் இந்தப் படம் புதிய சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
102 days ago
102 days ago
102 days ago