மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
100 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
100 days ago
தனுஷ் நடித்த குபேரா படம் தமிழை விட, தெலுங்கில் நன்றாக போகிறது. அங்கே சக்சஸ் மீட்டே வைத்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் படம் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியால் தனுஷ் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. அவர் நடித்த ராயன் 100 கோடியை தாண்டியது. அவர் நடித்த வாத்தி, திருச்சிற்றம்பலம் படங்களின் வசூலும் 100 கோடியை தாண்டியுள்ளது. குபேராவும் 100 கோடியை தாண்டும் என்பதால் தெலுங்கிலும் அவருக்கு கணிசமான மார்க்கெட் அதிகரித்துள்ளது. சில ஹிந்தி படங்களில் நடித்து அங்கேயும் ஹிட் கொடுத்துள்ளதால் சாட்டிலைட், டிஜிட்டல் விஷயத்தில் தனுஷ் படங்களுக்கு ஏறுமுகம். இட்லி கடை படமும் ஹிட்டானால் தனுஷ் சம்பளம் 50 கோடிவரை செல்லும் என்று கூறப்படுகிறது. தமிழில் 50 கோடி சம்பளத்தை தாண்டியவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற சிலரே, அந்த பட்டியலில் தனுசும் இணைய உள்ளார்.
100 days ago
100 days ago