ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கூலி'. அமீர்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். அனிருத் இசையமைத்திற்கும் இந்த கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கு 'மஜதூர்' என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஹிந்தியில் 1983ம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பில் 'கூலி' என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளியான நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் வருண் தவான் நடிப்பிலும் 'கூலி நம்பர்-1' என்ற பெயரில் ஒரு படமும் ஹிந்தியில் வெளியாகியுள்ளன. அதன் காரணமாகவே ரஜினி நடித்துள்ள இந்த கூலி படத்தின் ஹிந்தி பதிப்புக்கு 'மஜதூர்' என்று டைட்டிலை மாற்றி வைத்திருக்கிறார்கள்.