உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா?

என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா?

பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ. தமிழில் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ஒரு படம், 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து வருகிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கும் டியூட் படம் பான் இந்தியன் படமாக உருவாகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதில் மமிதா கேரக்டர் பெயர் 'குறள்' என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை மமிதா பைஜூ கூறுகையில் ''பல வெற்றி படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். எனது கதாபாத்திரப் பெயர் குறள். 'டியூட்' படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்'' என்கிறார்.

இப்படியொரு வித்தியாசமான பெயரை மமிதாவுக்கு ஏன் வைத்தார் என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !