'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர்
ADDED : 100 days ago
ரஜினி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'கூலி'. இதன் படப்பிடிப்பை முடித்து விட்டு 'ஜெயிலர் 2' படப்பிடிப்புக்கு சென்று விட்டார் ரஜினி. இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக நேற்று 'சிக்கிடு' என்ற படத்தின் முதல் பாடல் வெளியானது. இந்த பாடலில் ரஜினி நடன கலைஞர்கள் ஆடியுள்ளனர். இதுதவிர டி.ராஜேந்தருடன், நடன இயக்குனர் சான்டி, இசை அமைப்பாளர் அனிருத்தும் இணைந்து ஆடுகிறார்கள். இந்த பாடலும், காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.