உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்!

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்!


இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சனை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்கவுள்ளார். தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் எச்.வினோத்.

இந்த நிலையில் புதிதாக வினோத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். இந்த படத்தின் திரைக்கதையை வினோத் எழுதியுள்ளார். இதில் கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ராஜூ நடிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !