மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
97 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
97 days ago
‛கற்றது தமிழ்' ராம் இயக்கி உள்ள ‛பறந்து போ' பட பாடல் வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசுகையில் அப்பா மகன் உறவை இந்த படம் பேசுகிறது. பல காட்சிகளில் அப்பாவாக நடித்த சிவாவும் அவர் மகனும் கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற கருத்தை படக்கரு சொல்கிறது. என் அப்பா உயிரோடு இல்லை. அவர் என்னை கலெக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்த காலத்தில் மதுரையில் அப்படிப்பட்ட வசதி இல்லை.
என்னால் கலெக்டர் ஆக முடியவில்லை. ஆனால் பேச்சாளர் ஆகிவிட்டேன். அதை கூட அவரால் பார்க்க முடியவில்லை. என் அப்பாவை படம் நினைவுபடுத்தியது. நம் குடும்பத்துடன், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டாம். உள்ளூரில் இருக்கும் நல்ல இடங்களுக்கு செல்லலாம் என்ற படக் கரு பாராட்ட பட வேண்டியது என்றார்.
அதேபோல் விழாவில் பேசிய இயக்குனர் கஸ்தூரிராஜாவும் என்னால் சூழ்நிலை, வேலை காரணமாக குடும்பத்துடன், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. ஆனால் என் வாரிசுகள் குழந்தைகளுக்கு நேரம் கொடுக்கிறார்கள், அதை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றார்.
அஞ்சலி, பேசுகையில் ராம் சார் ஸ்டைலில் எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம் பறந்து போ, கற்றது தமிழ் ஆனந்தி மாதிரி இந்த படத்தில் வரும் மொக்க ஜோக் வனிதா கேரக்டர் பேசப்படும். இந்த படத்தில் ஹீரோயின் கிரேஸ் சூப்பராக நடித்துள்ளார். அவரை போனில் பாராட்டினேன் என்றார்.
97 days ago
97 days ago