விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை
ADDED : 96 days ago
ஜானி டிசோசா இயக்கத்தில் நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு 'சின்னதா ஒரு படம்'. படம் குறித்து படக்குழு கூறியது, இந்த படம் நான்கும் வேறுபட்ட கதை களங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டது. ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படம். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் படம் வழங்குகிறது. இந்த படத்தில் விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி, லட்சுமி பிரியா சந்திரமவுலி நடித்துள்ளனர். முக்கிய துணை வேடங்களில் சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன் நடிக்கிறார்கள். ஜூலை இறுதியில் படம் ரிலீஸ் ஆகிறது என்றனர்.