உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம்

பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம்

ஜி.ஆர்.லட்சுமணன் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் 'லாவண்யா'. ஒளிப்பதிவாளர்களான மார்கஸ் பார்ட்லி மற்றும் ஆதி இரானி ஆகியோர் தயாரித்தனர். இரண்டு ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் வரும் தேவதைகளின் கதை. குமாரி கமலா, வனஜா ஆகியோர் ஏழைப் பெண்களாக நடித்தனர். சூர்யபிரபா நாயகியாக நடித்தார்.

படத்தில் இந்த இருவரின் நடனங்கள் பிரதானமாக இடம் பெற்றது. வழுவூர் ராமையா பிள்ளை, கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் ஹிரலால் ஆகியோர் நடனம் அமைத்தனர். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார். எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்தார். 'புலிமூட்டை' ராமசாமியும் ஜெயாவும் காமெடி வேடங்களில் நடித்தனர்.

இனிமையான இசை மற்றும் அற்புதமான ஒளிப்பதிவு, நாயகிகளின் நடனம் ஆகியவை இருந்தபோதும் லாவண்யா வெற்றி பெறவில்லை. என்றாலும் படத்தில் இடம்பெற்ற நடனங்கள் ஓரளவிற்கு படத்தை காப்பாற்றியது என்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !