10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர்
மார்வெல் காமிக்ஸ் ஹீரோக்கள் பெண்டாஸ்டிக் போர். மறையும் சக்தி, நெருப்பை கக்கும் வீரன், ஒரு பலசாலி, மோமப்ப சக்தி மிக்கவர் என 4 சூப்பர் ஹீரோக்களின் கூட்டணிதான் பெண்டாஸ்டிக் போர். இதன் முதல் திரைப்படம் 1992ம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரானது. இரண்டாவது படம் 2005ல் வெளியானது, மூன்றாவது படம் 2007ல் வெளியானது.
எல்லா படங்களுமே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. அடுத்து 2015ல் வெளியான படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றது. 2017ல் ஒரு படம் வெளிவருவதாக இருந்து பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இதன் அடுத்த பாகம் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவருகிறது. 'பெண்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்' என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த படத்தை மேட் ஷக்மேன் இயக்கியுள்ளார்.
பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டசை (ரால்ப் இனேசன்), பெண்டாஸ்டிக் போர் டீம் வெல்வதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் முந்தைய படங்களை விட கூடுதலாக செண்டிமென்ட் காட்சிகள் இடம்பெறுகிறது. பெண்டாஸ்டிக் போரின் குடும்ப உறவுகளும் படத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது.
பால் வால்டர் ஹவுசர், ஜான் மால்கோவிச், நடாஷா லியோன் மற்றும் சாரா நைல்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 25ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.