உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான்

விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான். தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல ஆண்டுகளாக வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'சித்தாரே ஜமீன் பார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சமீபத்தில் அமீர் கான் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார். இந்த படம் எப்போது துவங்கும் என தெரியவில்லை. இதற்கிடையில் அமீர்கானை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு படத்தை தயாரிக்க போகிறாராம். இதை விஜயை வைத்து வாரிசு, மகேஷ் பாபுவை வைத்து ‛மகரிஷி' போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !