2027ம் ஆண்டில் வெளியாகும் ‛பிச்சைக்காரன் 3'
ADDED : 98 days ago
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நடிகராக அறிமுகமானது ‛நான்' படத்தில் தான். நடிகராக இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் 2016ல் வெளியான ‛பிச்சைக்காரன்'. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சக்க போடு போட்ட இந்த படத்தை சசி இயக்கினார். தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‛பிச்சைக்காரன் 2', 2023ல் வெளியானது. இதை சசி இயக்கவில்லை, விஜய் ஆண்டனியே இயக்கினார். முதல்பாகம் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடிக்கவுள்ளார். இப்படம் 2027ம் ஆண்டு, கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது என சமீபத்தில் வெளியான ‛மார்கன்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.