மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
94 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
94 days ago
திரையுலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட சமந்தா, தற்போது படங்களில் அதிக அளவு நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். ஒருபக்கம் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அதேசமயம் எங்கு சென்றாலும் தனது உடற்பயிற்சியை மட்டும் நாள்தோறும் தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் பார்வைக்கு பதிவிட்டு வருகிறார். ஆனால் சமந்தாவை பார்ப்பவர்கள் எல்லோரும் அவரை ஏதோ நோய்வாய்ப்பட்டவர்கள் போல ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்வது உண்டு.
இந்த நிலையில் தற்போது சமந்தா, தான் புல் அப்ஸ் எடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “இங்கே பாருங்கள் ஒரு சவால்... நான் இப்போது செய்வது போல ஆரம்பத்தில் இதை மூன்று முறை செய்யுங்கள். அப்படி செய்ய முடியாவிட்டால் என்னை ஒல்லியானவள், நோய்வாய்ப்பட்டது போல இருக்கிறீர்கள் என்று யாரும் அழைக்கக்கூடாது. ஒருவேளை உங்களால் முடியாவிட்டால் நீங்கள் சொன்னீர்களே அந்த வார்த்தை தான் உங்களுக்கு” என்று கூறியுள்ளார்.
94 days ago
94 days ago