உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல்

சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல்

தக் லைப் படத்துக்கு பின் சிம்பு நடிக்கும் படம் எது? முதலில் ரிலீஸ் ஆகும் படம் எது? என்ற விஷயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். சில வாரங்களுக்கு முன்பு தக் லைப் பின் பார்க்கிங் பாலகிருஷ்ணன் படம், அடுத்து அஸ்வத் மாரிமுத்து படம், இடையில் தேசிங் பெரியசாமி இயக்கும் படங்களில் சிம்பு நடிப்பார் என்று கூறப்பட்டது. தக் லைப் தோல்விக்குபின் அவர் வட சென்னை 2வில் நடிக்கப் போகிறார். வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என தகவல் வந்தது. ஆனால் இதுபற்றி எந்த அறிவிப்பு வராமல் இருந்தது.

வட சென்னை 2 அந்த கால படம் என்பதால், சிம்பு கெட்-அப் மாற வேண்டியது இருக்கும். மற்றபடங்களில் நடிக்க முடியாது. ஆகவே, அவரின் லைன் அப் பாதிக்கப்படும் சூழல் இருந்தது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படம் சிம்புவை வைத்து இயக்குவதாக தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும் இது வட சென்னையை தொடர்புபடுத்தி எடுக்கப்படும் படம் ஆனால் வட சென்னை 2 அல்ல தெளிவுப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !