உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக்

கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக்

தெலுங்கில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் சிறப்பு வேடங்களில் நடித்த கண்ணப்பா திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. ரசிகர்களிடம் டீசன்டான வரவேற்பையும் பெற்று உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் பிரபாஸ் வரும் காட்சிகள் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது என ரசிகர்களும் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

இந்த படத்தை பாலிவுட் இயக்குனரான முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியிருந்தார். விஷ்ணு மஞ்சுவின் தந்தை நடிகர் மோகன் பாபு தயாரித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட்டை கொண்டாடிய விஷ்ணு மஞ்சுவிடம் இப்படி ஒரு பக்காவான தென்னிந்திய புராணக்கதை அம்சம் கொண்ட ஒரு படத்திற்கு தெலுங்கில் இயக்குனர்களே கிடைக்கவில்லையா, எதற்காக பாலிவுட்டில் இருந்து இயக்குனரை அழைத்து வந்து இயக்க வைத்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து பேசிய விஷ்ணு மஞ்சு, “கண்ணப்பா கதையுடன் நான் பல தெலுங்கு இயக்குனர்களை அணுகியபோது யாருமே இதில் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை. அது மட்டுமல்ல என்னுடைய முந்தைய சில படங்களும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்திருந்தன. அதுவும் ஒரு காரணம். அதேசமயம் முகேஷ் குமார் சிங், மகாபாரத கதையை தொடர்களாக இயக்கி வெற்றி பெற்றவர். சினிமாவில் அவருக்கு கண்ணப்பா தான் முதல் படம் என்றாலும் கூட அவரது அனுபவத்தால் இதை ஒரு சிறப்பான திரைப்படமாக எடுத்துக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !