மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
93 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
93 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
93 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
93 days ago
சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்தாண்டு வெளியான படம் அனிமல். கடும் விமர்சனங்களை சந்தித்த போதும் 900 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியது. குறிப்பாக, இந்த படத்தை பார்த்தவர்கள் அனிமல் படத்தை யாரும் பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்கள். அந்த அளவுக்கு வன்முறையும், ஆபாசமும் நிறைந்திருந்தது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களை பாதிக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம். நான் ஒருபோதும் படம் பார்த்து இன்புளுயன்ஸ் ஆக மாட்டேன். அப்படியாவதாக நினைத்தால் அது போன்ற படங்களை பார்க்காதீர்கள். இந்த அனிமல் படத்தை யாரையும் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. எல்லா மனிதர்களுக்குமே ஒரு கிரே கேரக்டர் உண்டு. அப்படிப்பட்ட கேரக்டரைதான் அனிமல் படத்தில் காண்பித்திருந்தார் இயக்குனர். அந்த வகையில் அந்த படத்தை மக்கள் கொண்டாடி உள்ளார்கள். அதனால் தான் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. யாராக இருந்தாலும் படத்தை படமாக பார்க்க வேண்டும். அந்த படங்களில் வரும் கதாபாத்திரத்தோடு நடிப்பவர்களை இணைத்து பார்க்க கூடாது. படங்களில் நாங்கள் நடிப்பது வேறு. நிஜ கேரக்டர் வேறு என்று கூறியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
93 days ago
93 days ago
93 days ago
93 days ago