பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்
ADDED : 95 days ago
தமிழில் சித்தார்த், அமலாபால் பால் நடித்த ‛காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். தொடர்ந்து துல்கர் சல்மானின் ‛வாயை மூடி பேசவும்', தனுஷின் ‛மாரி மற்றும் மாரி 2' ஆகிய படங்களை இயக்கினார். 2018ல் மாரி 2 படத்திற்கு பின்னர் வேறு படங்கள் இயக்கவில்லை. சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார் பாலாஜி மோகன். இந்த முறை அவர் படம் இயக்கவில்லை, மாறாக வெப்சீரிஸ் இயக்குகிறார். இதில் நாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு சென்னையில் சத்தமின்றி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.