உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா'

தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா'

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் பத்து நாட்களுக்கு முன்னர் வெளியான படம் 'குபேரா'. பான் இந்தியா படமாக வெளியானாலும் இந்தப் படத்தை ஒரு முழுமையான தெலுங்குப் படம் போல தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அதனால், தமிழில் தனியாக படமாக்கப்பட்டும் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை ஒரு டப்பிங் படம் போலவே பார்த்தார்கள். எனவே வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, இப்படம் தற்போது தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டோலிவுட் தகவல்படி அங்கு இப்படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளது. அங்கு சுமார் 30 முதல் 35 கோடிக்கு தியேட்டர் உரிமை விற்கப்பட்டுள்ளது. நிகர வசூலாக 35 - 40கோடி வந்துள்ள நிலையில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 3 அல்லது 4 கோடி வந்திருக்கலாம் என்கிறார்கள். இருப்பினும் அதிக லாபம் கிடைக்காத ஒரு சூழல்தான் உருவாகியுள்ளது. அதே சமயம் மற்ற மொழிகளில் இப்படம் நஷ்டத்தைத் தான் தரும் என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !