ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர்
ADDED : 93 days ago
ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கில் துல்கர் சல்மானுடன் சீதா ராமம் படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் அடித்ததால் தென்னிந்திய சினிமாவிலும் பிரபலமானார். அதன்பிறகு தெலுங்கில் நடித்த ஹாய் நானா படமும் ஹிட் அடித்தது. இதன் காரணமாக தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இயங்கி வரும் மிருணாள் தாக்கூர், தற்போது தாய்லாந்தில் பிரபலமாகி இருக்கும் அண்ணனா பாத்தியே என்ற பாடலுக்கு தான் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஒரு அசத்தலான நடனம் ஆடி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் இணைய பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து, அதை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கினர்.