உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் பட ஹீரோயின் யார்

அஜித் பட ஹீரோயின் யார்

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது ஆதிக் ரவிசந்திரன் என்பது முடிவாகிவிட்டது. படத்தை தயாரிப்பது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனேகமாக ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கப் போகிறார். குட் பேட் அக்லிக்கு அவர் தான் இசையமைத்தார். ஆதிக்கின் பல ஆண்டு நண்பர். அதனால், அதில் மாற்றம் வராது என கூறப்படுகிறது.

அடுத்தப்படியாக படத்தின் ஹீரோயின் யார், வில்லன் யார் என்பது கேள்வியாக இருக்கும். ஆதிக் படங்களில் ஒன்றிண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள். இந்த படத்திலும் அப்படியே. அஜித்துடன் நடித்த ஒரு முன்னாள் ஹீரோயினும் நடிக்க வாய்ப்புள்ளதாம். அது யார் என்பதும் சஸ்பென்ஸ ஆக உள்ளது என்கிறார்கள் படக்குழுவினர். அதேசமயம் திரிஷா மட்டும் வேணாம் என்பது அஜித் ரசிகர்களின் குரலாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !