ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது
இந்த வாரம் (ஜூலை 4) ராம் இயக்கிய பறந்துபோ, சித்தார்த், சரத்குமார் நடித்த 3பிஹெச்கே, விஜய்சேதுபதி மகன் அறிமுகம் ஆன பீனிக்ஸ், மற்றும் கீர்த்தி பாண்டியனின் அஃகேனம், புதுமுகங்கள் நடித்த குயிலி, அனுக்கிரகன் ஆகிய 6 தமிழ் படங்களும், ஹாலிவுட் படமான ஜூராசிக் வேர்ல்ட் ரீபெர்த் என 7 படங்கள் வெளியாகின.
இதில் முதல்நாளில் எந்த படத்துக்கு நல்ல வரவேற்பு, எந்த படம் சுமார் என்று விசாரித்தால், ராமின் ‛பறந்து போ' படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததால் அந்த படம் ஓகே. 3 பிஹெச்கே பிக்அப் ஆக வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இந்த இரண்டு படங்களும் முதல் நாளில் பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. ஓகே ரகம் தான்.
விஜய்சேதுபதி மகன் படத்துக்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மற்ற படங்கள் வந்ததே தெரியவில்லை. ஜூராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்துக்கு கணிசமான ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். அந்த படம் வரும் நாட்களில் நன்றாக ஓடும் என்று தெரிகிறது. மிகப்பெரிய ஸ்டார் படங்களுக்கு மட்டுமே முதல் நாளில் நல்ல கூட்டம் வருகிறது. மற்ற படங்கள் படிப்படிப்பாக பிக்-அப் ஆகிறது. சில நல்ல படங்கள் தியேட்டரில் ஓடுவதை விட, ஓடிடியில்தான் அதிகம் வெற்றி பெறுகிறது என்கிறார்கள்.