டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின்
ADDED : 92 days ago
பிரேமலு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகையான மமிதா பைஜூ. இப்போது விஜய் உடன் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில், ‛‛நான் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது கூட டாக்டர் கனவு இருந்தது. ஆனால், 7 படங்களில் நடித்தபின் அந்த கனவை கைவிட்டு விட்டேன். முதலில் அதற்காக அப்பா வருத்தப்பட்டார். ஆனாலும் ஆதரவு கொடுத்தார். காரணம், அவர் நடிகராக நினைத்தார். ஆனால் அவர் டாக்டர் ஆகிவிட்டார். அவர் நன்றாக படிப்பார்'' என்று கூறியுள்ளார்.
கொச்சியில் பிஎஸ்சி சைக்காலாஜி படிக்க தொடங்கிய மமிதா பாதியில் அந்த படிப்பை விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.