ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா
ADDED : 93 days ago
2002ல் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு ஹிந்தி சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இதன் காரணமாக இந்திய படங்களில் அவர் நடிப்பது குறைந்துவிட்டது.
பிரியங்கா சோப்ரா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சமீபகாலமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அதிகமாக நடித்து வருகிறேன். அதனால் இந்தியாவையும் இந்திய படங்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னதான் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்தாலும் இனி இந்திய படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.