'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது
ADDED : 93 days ago
பிரபல நடிகர்களான வடிவேலு - பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் இது. சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி உள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.