உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான்

கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான்

2015ம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான 'இசை' படத்திற்கு பிறகு நடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தததால், இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் சில வருடங்களாக அவரது அடுத்த படத்திற்காக பிரம்மாண்ட கார் ஒன்றை மட்டும் வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

'கில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் . இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் .

தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இதன் மூலம் நியூ, கொமரம் புலி, அன்பே ஆருயிரே படங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி நான்காவது முறையாக கில்லர் படத்திற்கு இணைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !