சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ்
ADDED : 91 days ago
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அமரன் படத்தை அடுத்து, தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்தார் சாய் பல்லவி. அதன் பிறகு ஹிந்தியில் ஏக் தின் என்ற படத்தில் கமிட்டானார். இது அவரின் முதல் படமாகும். இதில் அமீர்கானின் மகன் ஜூனைத்கானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை சுனில் பாண்டே இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ராமாயணா படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார் சாய் பல்லவி.