உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா

‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா

பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸ், அனுஷ்கா காதல் குறித்த செய்திகள் வெளியானபோது அதை அவர்கள் இருவரும் மறுத்தார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினார்கள். இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் அனுஷ்கா, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தற்போது காட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஒரு காதல் சம்பவத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ‛‛நான் ஆறாவது படிக்கும் போது, என்னுடன் படித்த ஒரு மாணவன் என்னை காதலிப்பதாக கூறினான். உயிருக்கு உயிராக நேசிப்பதாகவும் கூறினான். அப்போது காதல் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது. என்றாலும் அவன் காதலை ஏற்றுக் கொண்டேன். காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த காதல் அனுபவத்தை இப்போது வரை என் வாழ்க்கையில் நடந்த ஒரு இனிய அனுபவமாக பாதுகாத்து வருகிறேன்'' என்று கூறியுள்ளார் அனுஷ்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !