வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன்
ADDED : 139 days ago
1990களில் பிசியான ஹீரோவாக இருந்தவர் சரவணன். சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் 'பருத்தி வீரன்' படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக ரீ என்ட்ரி கொடுத்து அதன் பிறகு 'பருத்தி வீரன்' சரவணன் என்றே அழைக்கப்படுகிறார்.
தற்போது வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர் தற்போது 'சட்டமும் நீதியும்' என்ற வெப் தொடரில் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார். சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார், பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற 18ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து சரவணன் கூறும்போது, சினிமாவில் 35 ஆண்டுகளை கடந்த எனக்கு, இந்த வெப் தொடர் மீண்டும் கதாநாயகன் அரிதாரம் கொடுத்துள்ளது. ரசிகர்களை ஈர்க்கும்படி எனது பயணம் இருக்கும்'' என்றார்.