மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா
ADDED : 93 days ago
ஜவான் படத்திற்கு பின் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்னொரு நாயகியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 1 மற்றும் 2 படங்களில் நடித்தார் ராஷ்மிகா. இப்போது இந்தப்படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க போகிறார்.