காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது!
ADDED : 93 days ago
'அதிசய பிறவி' படத்தில் ரஜினியுடன் நடித்து பிரபலமானவர் கிங்காங். அந்த படத்தில் கிங்காங் குருவாகவும் ரஜினி சிஷ்யராகவும் நடித்திருந்தார்கள். அதன் பிறகு வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தார் கிங்காங். இந்த நிலையில் தனது மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார் கிங்காங். அது குறித்து புகைப்படம் வீடியோக்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் இன்று கிங்காங்கின் மகள் கீர்த்தனா- நவீன் ஆகியோர் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அது குறித்த புகைப்படம், வீடியோக்கள் வெளியானதை அடுத்து ரசிகர்களும், சினிமா துறையினரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.