கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி
சர்தார் 2, வா வாத்தியார் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கார்த்தி அடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் அவரது 29வது படமான ‛மார்ஷல்'-ல் நடிக்கிறார். இதை ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் படம் உருவாகிறதாம். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. கப்பல் மாதிரியான செட் போடப்பட்டு அதில் படத்தின் பூஜையை நடத்தினர். இதில் கார்த்தியின் அப்பா, நடிகர் சிவக்குமாரும் கலந்து கொண்டார்.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்க, ஒளிப்பதிவு பணியை சத்யன் சூரியன் கவனிக்கிறார்.
மார்ஷல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.