பிக் பாஸ் ஹிந்தி சீசன் 19ல் புதிய மாற்றங்கள்
சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிரபல டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் ஹிந்தியின் இந்த வருட சீசன் 19 விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனுக்காக சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நிகழ்ச்சி ஐந்து மாதங்கள் வரை நடக்க உள்ளதாம். முதலில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி அடுத்த சில மணி நேரங்கள் கழித்துத்தான் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்களாம். மேலும் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே சல்மான் தொகுத்து வழங்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு இயக்குனர்கள் பரா கான், கரண் ஜோஹர், நடிகர் அனில் கபூர் ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். 'தில், கில்லி' படங்களில் நடித்த ஆசிஷ் வித்யார்த்தி, 'சாமுராய், வருஷமெல்லாம் வசந்தம்' படங்களில் கதாநாயகியாக நடித்த அனிதா, நடிகர் விஜய் தயாரிக்க அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய 'நண்பர்கள்' படத்தில் கதாநாயகியாக நடித்த மம்தா குல்கர்னி உள்ளிட்ட பலரிடம் பேசி வருகிறார்களாம்.