ஒரு பாடல் நடனம் - தமன்னா போல வரவேற்பு பெறுவாரா பூஜா ஹெக்டே ?
மிஷ்கின் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக உயர்ந்தார். பத்து வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'பீஸ்ட்' படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அடுத்து இந்த வருடம் வெளிவந்த 'ரெட்ரோ' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் பூஜா. தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு 'மோனிகா' என்ற அப்பாடல் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார். அந்தப் பாடலும், தமன்னாவின் நடனமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதுபோல, பூஜாவின் பாடலும், நடனமும் வரவேற்பு பெறுமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். இரண்டு படங்களுக்குமே இசை அனிருத். தமன்னாவின் 'காவாலய்யா' பார்வைகள் சாதனையை பூஜாவின் 'மோனிகா' தட்டித் தூக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.