உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா

எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா


சினிமாவில் சில கூட்டணிகள் உருவாகுமா? பேச்சுவார்த்தையில் இருக்கிறதா? வதந்தியா என்று சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால்தான் உண்டு. ரஜினியை வைத்து எச்.வினோத் படம் இயக்கப்போகிறார் என்று கடந்த வாரம் பேச்சு எழுந்தது. இல்லை, அவர் தனுசை வைத்துதான் படம் இயக்கப்போகிறார் என அவர் தரப்பு மறுத்தது. இப்போது மகாராஜா இயக்குனர் நித்திலன் சாமிநாதன், ரஜினி படத்தை இயக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார் என்று கூறப்படும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இப்போது அந்த பட்டியலில் இணைந்துவிட்டார். அஜித்துக்காக தனுசும் ஒரு கதை ரெடி பண்ணி, படம் இயக்க ஆர்வமாக இருக்கிறாராம். இது தவிர, விஷாலை வைத்து படம் இயக்கப்போகிறாராம் கவுதம்மேனன். கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க தீவிர டிஸ்கசனில் இருக்கிறாராம் சிறுத்தை சிவா. விக்ரமை வைத்து படம் இயக்க மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் தயாராக இருக்கிறாராம். கமலின் அடுத்த படத்தை வீரதீரசூரன் அருண்குமார் இயக்கப்போகிறார். இப்படி பல தகவல்கள் கோலிவுட்டில் உலா வருகின்றன. இதில் சில உண்மை என்றாலும், இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !