தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா
ADDED : 90 days ago
தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி திரைக்கு வந்த படம் குபேரா. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தெலுங்கில் நல்ல வசூலை கொடுத்த போதும், தமிழில் எதிர்பார்த்தபடி வரவேற்பு பெறவில்லை. இது படக்குழுவிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதன் காரணமாக குபேரா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க தவறிவிட்டது. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தற்போது தொடங்கியுள்ளார் சேகர் கம்முலா. தனது வழக்கமான எளிமையான உணர்ச்சிப்பூர்வமான கதையை படமாக்க திட்டமிட்டிருப்பவர், தனது அடுத்த படத்தில் நானியை நடிக்க வைப்பதற்கு ஒப்புந்தம் செய்துள்ளார்.