நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்!
ADDED : 93 days ago
கடந்த 1995ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'பாட்ஷா'. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களில் பாட்ஷா ஒரு உச்சம் என்றே சொல்லலாம். கேங்ஸ்டர் படங்களை பாட்ஷாவிற்கு முன், பின் என்றே பிரிக்கலாம்.
தற்போது பாட்ஷா படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனது முன்னிட்டும், சத்யா மூவிஸ் நிறுவனத்தின் 60வது ஆண்டு முன்னிட்டும் பாட்ஷா படத்தை வருகின்ற நாளை (ஜூலை 18) 4கே, டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.