‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு!
ADDED : 47 days ago
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படமான 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாத இறுதியில் லண்டன் மாநகரில் பிரமாண்டமாக நடத்த தற்போது இருந்தே திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்திலிருந்து முதல் பாடல் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.