உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்!

கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்!


நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்திற்கான கதாநாயகி தேடும் பணியில் உள்ளனர். முதற்கட்டமாக நடிகை சாய் பல்லவியை அணுகியுள்ளனர். அவர் ஹிந்தியில் உருவாகிவரும் ‛ராமாயணா' படத்திற்கு அதிகளவில் கால்ஷீட் தந்துள்ளதால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றார்.

இதையடுத்து இளம் நடிகை ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நடித்து வருவதால் அவருக்கு கால்ஷீட் பிரச்னை உள்ளதாக கூறி மறுத்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் தவறவிட்ட வாய்ப்பு தற்போது மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனிடம் சென்றுள்ளது. அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

krishsrk, Al Ain
2025-07-21 10:16:11

தப்பித்தார்கள்