உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி

10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி

ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அதையடுத்து தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் ஸ்டன்ட் சில்வா, சூர்யா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அனைத்து ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கும் நடிகர் சூர்யா இன்சூரன்ஸ் தொகை செலுத்துவதாகவும், ஒரு வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் அவர் கட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். என்றாலும் இது குறித்த தகவலை எந்த இடத்திலும் அவர் வெளியில் சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார்.

அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து சூர்யா கல்வி உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !